களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறு முறைப்பாடுகள் திணைக்களத்தில் முறைப்பாடொன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழே விழுந்து உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு சேனவிரத்ன பகுதியை சேர்ந்த கஜநாயக்க முதலிகே நாலக துஷார எனும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் காணி தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.