2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தேர்தலில் அனைத்து கட்சி வேட்பாளராக தான் களமிறங்கவுள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஊடகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவருடையதாகும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அவருக்கு சார்பான செய்திகளை அதிகமாக வெளியிட்டு வருகிறது. அத்தோடு அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரிவினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் அரசாங்கத்தில் இணையவுள்ளனர் எனவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
இந்த வாரத்தில் பாரளுமன்றத்தில் காணப்படும் குறைந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சி கூட்டத்திலேயே இந்த விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிர்ந்து கொண்டதாக தமக்கு கிடைத்த தகல்வளைக்கை அடிப்படையாகவ வைத்து குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரா சிக்கல்கள் மேம்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் மேலும் முன்னேற்றமடையுமெனவும் முழுமையாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதும் அனைத்து கட்சிகளோடும் கலந்தாலோசித்து தேர்தலுக்கும் செல்லவுள்ளதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தோடு தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரோடு ஆலோசனை நடாத்தியே முடிவெடுக்கப்படுமென மேலும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல். மே காலப்பகுதிதிகளில் பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்த விடயங்களை சமர்ப்பித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அதற்காக இணைந்து செயற்பட்டு பொருளாதரத்தை ஸ்திரப்படுத்த கோரிக்கை முன் வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறித்த கூட்டத்த்தில் கூறியுள்ளார்.
பாரளுமன்றத்தில் தனக்கான பெரும்பாண்மை காணப்படுவதாகவும், எதிர்கட்சிகளிலிருந்து அவசரமாக யாரையும் அரசாங்கத்தில் இணைக்க வேண்டிய தேவையில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இருப்பினும் விருப்பமானவர்கள் முக்கிய பதவிகளின்றி அரசாங்கத்தோடு குழுவாகவோ, கட்சியாகவோ இணைய முடியும். தங்களது கட்சிகள் அதற்கு இணங்கா விடில் தனியாக அராசாங்கத்துடன் இணைய முடியுமெனவும் கூறியுள்ளார். அவ்வாறு செய்ய விரும்பாதவர்கள் எதிர்கட்சியிலிருந்து ஆதரவு வழங்க முடியுமெனவும் கூறியுள்ளார்.
பொருளாதார மேம்பாட்டுக்காக அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படும் போது அவர்களுக்கு பணிகளும் பதவிகளும் வழங்கப்படுமென கூறியுள்ள ஜனாதிபதி ரணில், ஐக்கிய மக்கள் சக்தி அடங்கலாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பொருளாதரா மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
