தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற பரா விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற பரா விளையாட்டு வீரர்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை இன்று (10.04) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் வீரர்களின் திறமைகளை அமைச்சர் மதிப்பீடு செய்ததுடன் எதிர்வரும் போட்டிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன்ட் கேணல் தீபால் ஹேரத் தெரிவித்துள்ளார்.
• 2023 தேசிய பரா தடகள சம்பியன்ஷிப் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
இதில் பதக்கங்களை வென்ற வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:-
01.தினேஷ் பிரியந்த ஹேரத் – ஈட்டி எறிதல் – தங்கப் பதக்கம்
02.சமித்த துலன் – ஈட்டி எறிதல் – வெள்ளிப் பதக்கம்
• 2023 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் துபாயில் நடைபெற்றது.
01. அனில் பிரசன்ன ஜயலத் – 100 மீ ஓட்டப் போட்டி – தங்கப் பதக்கம்
02. மதுரங்க சுபசிங்க – 400 மீற்றர் – தங்கப் பதக்கம்
03. நுவன் இந்திக – 100 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் – வெள்ளிப் பதக்கம்
04.பிரதீப் சோமசிறி – 1500 மீ ஓட்டப் போட்டி – வெண்கலப் பதக்கம்
போட்டிகளில் பதக்கம் வென்ற வேர்களுக்கு அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.






