புத்தாண்டு காலத்தில் குயில் பாடும் ஓசை கேட்பது வழக்கம் எனினும் இம்முறை அதிகமாக குயிலிசை கேட்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் கூடுகட்டும் இந்த குயில்களின் ஓசை அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் குயில் கூவும் தடவைகள் அதிகரித்து, தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாகவும், மேலும் ஐந்து நாட்களுக்கு இது தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குயிலினங்கள் குறைவடைந்துள்ளன என்பதற்கு சான்றுகள் இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குயில் கூவும் தடவைகள் குறைந்தாலும் மே இறுதி வரை இது தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும், ஆசிய கோயல் (Eudynamys Scholopaceus) அல்லது இலங்கையில் கோஹா என்று பிரபலமாக அறியப்படும் குயில் இனங்கள் குக்கூ வரிசையில் இருக்கும் பறவைகளாக அறியப்படுகின்றன.