பசில் ஜனாதிபதி வேட்பாளர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் பசில் ராஜபக்ஷ என அந்த கட்சியின் பொது செயலாளர் சகார காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை தமது கட்சிக்கான வேட்பாளரை பெயரிடவில்லை. புதுவருடத்தின் பின்னர் பெயர் அறிவிக்கப்படுமென செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த தகவலை காரியவசம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலகட்டத்தில் வெளிநாடுகளுடன் தொடர்புகளை பேணியவர். வெளிநாட்டு தொடர்புகளை அவர் கொண்டுள்ளார். அவருக்கு வெளிநாட்டு ஆதரவு இருக்கின்றது. அவர் நாட்டை வழிநடத்தக்கூடிய தகமை கொண்டவர் எனவும் நாட்டின் சிறந்த தலைவராக செயற்படுவார் எனவும் சாகர காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுளளார்.

உலகத்தின் வேகமான அபிவிருத்தி கண்ட நாடக இலங்கை அபிவிருத்தியடைந்த காலத்தில் பொருளாதரா அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜ்சபக்ஷ இருந்தார் எனவும் காரியவசம் ஊடகவியலார் சந்திப்பில் இந்த விடயத்தினை சுட்டிக் காட்டியுள்ளார்.

பசில் ஜனாதிபதி வேட்பாளர்!

Social Share

Leave a Reply