கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைப் தொகைக்கான சுகாதார சான்றிதழ் அறிக்கையை இன்று (13.04) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டியிருந்தது.
சுகாதாரத் துறையினர் கடந்த சனிக்கிழமை (08.04) சம்பந்தப்பட்ட முட்டை கையிருப்பின் மாதிரிகளை எடுத்துச் சென்ற நிலையில், துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான சுகாதாரச் சான்றிதழ் நேற்று வரை வழங்கப்படவில்லை.
எனினும், இந்த முட்டைகளுக்கான சுகாதார சான்றிதழ் இன்று (13.04) வழங்கப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.