மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே நகர்வதால், இன்று (13.04) மதியம் 12:11 மணிக்கு மன்னார், பெரியமடு, புளியங்குளம், கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.