இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று (12.04) சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
“ஒரு விலங்கினை பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது ஒரு மிருகக்காட்சிசாலையில் பரிமாற்றமாக மட்டுமே அனுப்ப முடியும், இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்கின் எந்தப் பகுதியையும் ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. என அவர் தெரிவித்துள்ளார்.
“சீனா இலங்கைக்கு சொந்தமான குரங்குகளை கேட்கிறது என்றால், அவர்கள் என்ன கேட்கிறார்கள்? எத்தனை கேட்கிறார்கள்? மற்றும் எதற்காக கேட்கிறார்கள் என்று எங்கள் அதிகாரிகள் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்” எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.