இலங்கை மற்றும், அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்று(16.04) ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி திமுத் கருணாரட்ன, குஷல் மென்டிஸ் ஆகியோரின் ஆரம்ப துடுப்பாட்டத்தின் மூலம் பலமான நிலையை பெற்றுள்ளது.
திமுத் கருணாரட்ன மற்றும் நிஷான் மதுசங்க ஆகியோர் 64 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் திமுத் மற்றும் குஷல் இணைந்து அழுத்தங்களின்றி இலகுவாக ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்து சென்றது. இருவரும் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 281 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். குஷல் மென்டிஸ் 140 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதனை தொடர்நது மைதானத்துக்கு வருகை தந்த அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். டினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களையும், இரவு காப்பளார் பிரபாத் ஜெயசூர்ய 12 ஓட்டங்களை பெற்ற நிலையிலும் மைதானத்தில் காணப்படுகின்றனர்.
டிமுத் கருணாரட்ன பெற்றுக்கொண்ட 179 ஓட்டங்கள் மூலமாக இலங்கை அணிக்காக கூடுதலான டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் அரவிந்த டி சில்வாவை பின் தள்ளி ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் நாள் நிறைவில் இலங்கை அணி 04 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்களை பெற்றுள்ளது. கேர்ட்டிஸ் கம்பர் மற்றும் ஜோர்ஜ் டொக்ரல், பென் வைட், மார்க் அடர் ஆகியோர்தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.