சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலமாக செய்யப்படப்போகின்ற திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட அமுலாக்கள் தொடர்பில் பாரளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்தில் இந்த திட்டங்களை முன்வைக்க அனுமதி கோரியிருந்தார். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் சட்ட திட்டங்களை உருவாக்க பாரளுமன்றத்தின் அனுமதி கட்டாயம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.