மே இறுதியில் மின்சார திருத்த சட்டம் பாராளுமன்றத்தில்

மின்சார திருத்த சட்டத்துக்கான அனுமதி அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வரைபு பாராளுமன்றத்தில் மே மாத இறுதியில் சமர்பிக்கப்படவுள்ளது என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

மீளமைப்புக்கான மின்சார சபை திட்டங்களுக்கான அனுமதியே அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களுக்கான செயலகம் அமைத்தல், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர், ஜப்பான் சர்வதேச இணைப்பு முகவர் போன்ற அமைப்புகளில் உதவி பெறுவதற்க்கு அனுமதி, நிதி மற்றும் மனிதவள கணக்காய்வு மேற்கொள்ளல் மற்றும் முழுமையான மாற்றங்களை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மே இறுதியில் மின்சார திருத்த சட்டம் பாராளுமன்றத்தில்

Social Share

Leave a Reply