யாழ்ப்பாணத்தில் நேற்று (20.04) கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்த நோயாளர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், யாழ் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மருத்துவ ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடமாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.