பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ் இல்லாமையினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலக அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply