கொழும்பின் வெதுப்பகங்களுக்கு மட்டும் முட்டைகள் விநியோகம்?

கடந்த 14ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகள் கையிருப்பின் மாதிரிகள், பரிசோதனைக்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 24ம் திகதி இவற்றை விநியோகிக்க முடியும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு மட்டும் இதுவரையில் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை, ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை இதுவரை அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 19ம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகள் கையிருப்பின் மாதிரிகள் இன்று (22.04) விநியோகத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.

எவ்வாறாயினும், இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 02 மில்லியன் முட்டைகள் அடுத்த வாரம் நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply