குஜராத் அணி வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் அணிகளுக்கிடையில் இன்றைய (22.04) முதற் போட்டியாகவும் IPL இன் 30 ஆவது போட்டியாக நடைபெற்றது. லக்னோ அணிக்கு இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவையென்ற நிலைமையிலிருந்தது. இறுதி ஓவரில் 4 பந்துகளுக்கு 4 விக்கெட், அதில் இரண்டு பந்துகள் ரன் அவுட்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹார்டிக் பாண்ட்யா 66(50) ஓட்டங்களையும், விரிந்திமன் சாஹா 47(37) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், குறுநாள் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அமித் மிஷ்ரா, நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராஹுல் 68(61) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மோஹித் ஷர்மா, நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

குஜராத் அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

குஜராத் அணி வெற்றி

Social Share

Leave a Reply