இந்தியாவில் இருந்து கடந்த 19ம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மில்லியன் முட்டைகளின் மாதிரிப் பரிசோதனை இன்று (24.04) நடத்தப்படவுள்ளதாக அரச சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று (24.04) பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிரி பரிசோதனை அறிக்கையின் பின்னர் முட்டைகள் வெளியிடப்படவுள்ளதுடன், இவ்வாறு வெளியிடப்படும் முட்டைகள் கொழும்பில் உள்ள வெதுப்பகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.