வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு தடை இல்லை!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கு எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (24.04) உத்தரவிட்டுள்ளது.

மேலும், உடைக்கப்பட்ட ஆலய விக்கிரகங்கள் தொடர்பில் அடுத்த விவாதத்தில் ஆராயப்பட்டு, முறையான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய சிலை உடைப்பு தொடர்பில் இன்று நடந்த வழக்கு விசாரணையிலேயே, இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகிய நிலையில், தொல்லியத் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், அவர்கள் அடுத்த வழக்கில் முன்னிலையாகும் வரை, ஆலயத்துக்கு வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு பொலிசார் விடுத்த கோரிக்கையை, ஆலய நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதற்கமைய, இந்த விடயத்தின் அடுத்தகட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply