கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் இயங்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இன்று தெரிவித்தார்.
இன்று (24.04) மாலை முதல் வெளிநாட்டு பயணிகளுக்காக இந்த பிரத்தியேக கவுன்டர்கள் இயக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.