பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு!

கொலன்னாவையை சூழவுள்ள பல பகுதிகளுக்கு மே 8ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து வீதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா எலெக்ட்ரிசிட்டி தனியார் நிறுவனத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply