சீரற்ற காலநிலை – விமான சேவைகளில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து வந்த விமானமும், மாலைதீவின் மாலேயில் இருந்து வந்த விமானமுமே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் வந்த பயணிகள், பஸ்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply