கொவிட்-19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என அறிவித்து உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், கொவிட்-19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அண்மைய காலங்களாக, கொவிட்-19 வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கோவிட் -19 இன் தற்போதைய பரவலைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பின்னர், உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு, இது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலையாக கருதப்படாது என்று அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 06 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.