ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் கொசுஷிமா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டியுள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நில அதிர்வுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply