மகிந்த ராஜபக்ச தம் மக்களுக்காகவே பதவி துறந்ததாகவும், மக்களின் விருப்பத்துடன் தான் மீண்டும் பதவிக்கு வருவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்காக கொழும்பு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ரீதியிலும், எல்லா விதத்திலும் வீழ்ந்த நாடு மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மீனும் சரிவை சந்திக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் சுற்றுலாத்துறை, வர்த்தகங்கள் மட்டுமன்றி நாட்டின் நன்மதிப்பும் சிக்கலுக்குள்ளாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் மூலம் வீழ்வது ராஜபக்ஷக்களோ, ஜனாதிபதியோ அல்ல, முழு நாடும் வீழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டத்தின்போது தனது வீட்டிற்குள் வந்து நாய்க்குட்டியை திருடியவர் கைது செய்யப்பட்டது போல, பாராளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.