CID விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதகர் தப்பியோட்டம்?

இந்து, பௌத்தம், இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு இன்று(16.05) அதிகாலை சிங்கபூர் சென்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கு செல்வதற்கான விசாவினை ஜெரோம் பெர்னாண்டோ கொண்டுள்ளதாகவும், சிங்கப்பூரில் இருந்து அந்த இரு நாடுகளில் ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஜெரோம் பெர்னாண்டோ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதுவரை உறுதி செய்யவில்லை.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply