அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை!

ஜின் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகளுக்கு நாளை (17.05) பிற்பகல் 2 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், கின், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply