விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்தும் 47வது தேசிய காற்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நேற்று (16.05) ஆரம்பமானது. ஆண்களுக்கான போட்டிகள் பொலன்னறுவை கல்லெல்ல மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், பெண்களுக்கான போட்டிகள் பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்திலும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.
09 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 18 பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் போட்டியில் பங்குபற்றவுள்ளன. முதலாவது ஆண்களுக்கான போட்டியில் மேல் மாகாணமும் ஊவா மாகாணமும் பலப்பரீட்சை நடத்தியதுடன், அந்தப் போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் மேல் மாகாணத்தை தோற்கடித்து ஊவா மாகாணம் வெற்றி பெற்றுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.முத்துமால, பணிப்பாளர் ஐ.பி.விஜேரத்ன, புகழ்பெற்ற உதைபந்தாட்ட கழக ஸ்தாபகர் ரொபர்ட். பீரிஸ், பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் அத்தியட்சகரும், ஸ்வடுரு ஓயா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான கே.டி.சந்திரபால, ஊவா மற்றும் வடமேற்கு மாகாண விளையாட்டுப் பிரிவின் தலைவர்
இயக்குனர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.