போதகர் ஜெரோம் பெர்னான்டோ ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார்?

இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்களை இழிவுபடுத்தி பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு துறையை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் போதகர் ஜெரோம் பெர்னான்டோ விசாரணைக்கு பயந்து வெளிநாடு தப்பி சென்று விட்டார் என தகவல்கள் வெளியாகிய போதும், அவர் கடந்த 14 ஆம் திகதி நாட்டை விட்டு சென்றுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு தற்போது வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க முன்னதாகவே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் “ஏற்கனவே திட்டமிட்ட அமைச்சின் உத்தியோக பூர்வ வேலைகளுக்காக தான் வெளிநாடு வந்துள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன் எனவும், தனது ஆராதனை கூடத்தில் சந்திப்போம்” எனவும் ஜெரோம் பெர்னாண்டோ சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.

இதேவேளை, மே 19 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அவரை பின்பற்றுபவர்களுடன் ஆராதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதற்கான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்ட அமைப்புகளின் ஒன்றியங்களின் பேச்சாளர் நிரசன் விதானகே நேற்று(16.05) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டில் “இந்த விடயத்துக்கு பின்னால் பலம் பொருந்திய அரசியல் கை காணப்படுவதாகவும், கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முதலில் இது போன்ற விடயங்கள் நடைபெற்றதாகவும்” தெரிவிக்கபப்ட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் அவரது சகாக்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதியும், பிரதமருமான முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். சில ஊடங்களும் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply