இலங்கை போக்குவரத்து சபையின் பாடசாலை பருவ பயணச்சீட்டு(சீசன்) கட்டணத்தை சுமார் 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் இலங்கை டிப்போவுக்கான புதிய அரச பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், சிசு சரிய திட்டத்திற்காக அரசாங்கம் தற்போது மிக அதிகமாக செலவு செய்து வருவதால், பாடசாலை மாணவர்களின் சீசன் டிக்கெட் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் என்றும், மீதமுள்ள இரண்டு பங்கு அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவைகளை தொடர்வதா நிறுத்துவதா என்பது, குறித்த கட்டண திருத்தத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.