தினேஷ் ஷாப்டரின் உடலை தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பம்!

முன்னாள் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்டரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், தற்போது விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply