சீனாவில் தீவிரமடையும் கொவிட் பரவல்!

சீனாவில் கொவிட் -19 ஒமிக்ரோன் திரிபின் பரவல் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வாரமளவில் 65 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.

சீனாவின் சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, குறித்த செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.

அதன்படி, இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் சீனாவில் புதிய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியனைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , சீனாவில் கொவிட் நோயை பூஜ்ஜியமாக்குவதற்கான கொள்கையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்துள்ளமையால் அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply