ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (18.06) நடைபெற்றது.

இதன்போது கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக கருணாகரம், பொருளாளராக ச.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா, வேந்தன் ஆகியோர் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply