பிரசன்ன ரணவீரவின் வீட்டை குறிவைத்து இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோனவில, பமுனுவில சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், வீட்டின் எட்டு ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply