இன்று (05.07) முதல் சாப்பாட்டு பொதி மற்றும் கோத்தாவின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக உணவு பொதிகளின் விலைகளும் திருத்தப்பட வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை திருத்தம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனினும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டதன் பலனை நுகர்வோர் பெற்றுக்கொள்வது அவசியம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு மற்றும் பேக்கரி பொருட்களை நியாயமான விலையில் விற்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.