சீனா மற்றும் தைவானுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், 24 போர் விமானங்களை அனுப்பி சீனா அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தைவான் ஜலசந்தியின் இடைக் கோட்டுப் பகுதியில் நேற்று (04.07) குறித்த விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் நான்கு சீன போர்க்கப்பல்களும் “கூட்டு போர் தயார்நிலை ரோந்துப்பணியில்” ஈடுபட்டதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.