ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினமும் (06,07) மூடப்படும் என பிராந்திய கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலயக் கல்வி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஹட்டன் பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்றும் (05) மூடப்பட்டிருந்தன.