வகுப்பாசிரியரால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்றாம் தர மாணவி ஒருவர் வகுப்பு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

தாக்குதலால் படுகாயமடைந்த மாணவி வலது கையை தூக்க முடியாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்திய கல்விப் பணிப்பாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply