விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடே பிரச்சினைகளுக்கு காரணம் – நிமல் சிறிபால டி சில்வா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையினால் பிரச்சினைகளை சந்திக்கவில்லை எனவும், விமானிகளின் அர்ப்பணிப்பற்ற செயற்பாடு காரணமாகவே பிரச்சினைகளை சந்தித்துள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு அதிக தேவை காணப்படுவதாகவும், ஆனால் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான விமானிகள் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 26 விமானங்களை இயக்கிய போது 316 விமானிகள் மட்டுமே இருந்தனர். தற்போது 15 விமானங்கள் மட்டுமே இயங்கும் போது 266 விமானிகள் இருக்கிறார்கள்.

26 விமானங்களை இயக்குவதற்கு 316 விமானிகள் இருந்தபோது நடவடிக்கைகள் சுமூகமாகவே நடைபெற்றன. விமானிகளின் அர்ப்பணிப்பு குறைபாடு காரணமாகவே தற்போது விமான சேவை சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

விமானிகளின் நாசவேலை காரணமாகவே அண்மையில் கொரியாவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாகியது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply