பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதாக அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதா என்பது தொடர்பில் முடிவெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொது பாதுக்காப்பு அமைச்சர் ரிரான் அலஷை இறுதி முடிவை எடுக்குமாறு பணித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டதாக தகவல்கள் நேற்றைய தினம்(08.07) வெளியாகிய போதும், பின்னர் அவ்வாறு முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவம் வெளியாகவில்லை. தகவல்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன, உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவே அவை அமைந்துள்ளன.
இன்று(09.07) ஜனாதிபதிக்கும், அமைச்சர் ரிரான் அலஸுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் இறுதி முடிவெடுக்கப்படும் என நம்பப்படுகிறது. கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக காணப்படுகிறது.