உலகக்கிண்ண தகுதிகாண் இறுதி போட்டி – திமுத் கருணாரத்ன பங்கேற்பாரா?

ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியில் உடல் உபாதை காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன பங்குபற்றமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகக் கிண்ண தெரிவுகாண் தொடரில் விளையாடிய 07 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருப்பது இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அணி 9 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியினை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் 10 போட்டிகளில் தொடர் வெற்றியினை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply