குறைந்த செலவில் தாய்லாந்துக்கான விமான சேவை ஆரம்பம்!

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  எயார் ஏசியா விமானமான AIQ-140  தனது முதலாவது பயணத்தை Don Mueang சர்வதேச விமான நிலையத்தில் ஆரம்பித்து இன்று (07.10) இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இது ஏ-320 ஏர்பஸ் வகை விமானமாகும். அந்த விமானத்தில் 134 பயணிகளும் 07 பணியாளர்களும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், 174 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லவுள்ளனர்.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 04 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

ஒரு முறை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து செல்வதற்கு INR 50,000  மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply