பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (07.09) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பொலனறுவை வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த பயங்கர பேருந்து விபத்து இடம்பெற்ற கொத்தலிய பாலம் அடிக்கடி விபத்து இடம்பெறும் ஒரு பாலமாகவே உள்ளதென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக அதிகளவிலான மக்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.