ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் சந்திம வீரக்கொடி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இணைந்துக்கொண்டுள்ளார்.

ஹபராதுவ தொகுதியின் அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தையும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொண்ட வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹபராதுவ தொகுதியின் பிரதான அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக சிலகாலம் செயற்பட்டு வந்தார்.

கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய அவர், மொட்டு எங்கே இருக்கின்றது என்று அந்த கட்சியினருக்கு தெரியாது எனவும், அது அமெரிக்காவில் இருக்கின்றதா அல்லது ரணில் விக்ரமசிங்கவிடம் இருக்கின்றதா, மெதமுலனவில் இருக்கின்றதா என்பதும் அவர்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் அழிவுக்கு அவர்களே காரணம் என தெரிவித்த அவர்,
இதுவரை காலமும் இருந்த சமுர்த்தி திட்டம் தற்போது அஸ்வெசுமவாக மாறி, இறுதியில் மக்கள் மத்தியில் கண்துடைப்பாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

குழி ஒன்றை தோண்டி அதில் மக்களை போட்டு மண்ணை இட்டு மூடும் நடவடிக்கை தான் இவர்களுடைய திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply