ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கான மீதி பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 10 கோடி ரூபாவினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன செலுத்த வேண்டும். அதில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை மைத்திரிபால சிரிசேன செலுத்தியுள்ளார்.
இவ் வருடம் ஜூன் 30 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மிகுதி பணத்தினை 10 தவணைகளில் செலுத்துவதாகவே சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை செலுத்த முடியாமல் இருப்பதனாலேயே கால அவகாசம் கோரியுள்ளார்.