நவகமுவ சம்பவம் – பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு!

நவகமுவ பௌத்த தேரர் விவகாரத்தின் பின்னணியில் புலம் பெயர் தமிழர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர், பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன என குற்றம் சுமத்தியுள்ளார்.

பௌத்தமதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது எனவும், பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த புலம்பெயர் சமூகம் நிதி வழங்குகின்றது எனவும் கூறியுள்ளார்.

சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைகள் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்ற நிலையில் பௌத்த மதகுருமாரும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆகவே அவர்கள் குற்றச்செயல்களிற்கு பலியாகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்தமதகுருமார் என்ற அடிப்படையில் நாங்கள் வீடியோக்களில் காணப்படும் சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை எனத் தெரிவித்த அவர், சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்தமதகுருமாரின் கௌரவத்தை அதிகாரத்தை குறைப்பதற்காக இவை முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கூறினார்.

Social Share

Leave a Reply