அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

அஸ்வெசும நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதியோர் பயனாளிகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த 2012ம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீடமைப்புக் \ கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply