மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா அபாரம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பித்த டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இத்தியா அணி பலமான நிலையில் காணப்படுகிறது.

முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் அலிக் ஆதன்ஸ் 47 ஓட்டங்களை பெற்றார். கிரைக் ப்ராத்வைட் 20 ஓட்டங்கள். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 35 ஆவது ஐந்து விக்கெட் பெறுதியினை பெற்றுக் கொண்டார். ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இந்தியா அணி விக்கெட் இழப்புகளின்றி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது. தனது அறிமுகப் போட்டியில் விளையாடும் ஜஷாஸ்வி ஜய்ஸ்வால் 40 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 30 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply