வத்தளை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடம் 217 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 36 வயதுடைய ஹெந்தல மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.