இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு மாகாணங்களின் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (13.07) திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்டம் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி இலக்கினை முழுமையாக பூர்த்தி செய்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இவ் அடைவு மட்டத்திற்கான தேசிய விருதினை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் அவர்கள் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட திட்டமிட பணிப்பாளர் ரொகாந், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் சார்பாக சஞ்சீவ அவர்களுக்கும் சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி சஜிகா அத்துடன் சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட உத்தியோகத்தர் ஜி.ஜோன்பிசர் ஆகியோரும் அடைவு மட்டத்திற்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இவ்விருது வழங்கும் நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு தேசிய அடைவு மட்டத்தினை அடைந்தமைக்காக பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாரக் நிர்வாக உத்தியோகத்தர் எ.அலாவுதீன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.மசாகிர் அவர்களிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேசசெயலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.