ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் ஜனாதிபதியாக இருப்பதால், கட்சிப் பணிகளைச் செய்ய அதிக நேரம் செலவிட முடியாமல் உள்ளதாகவும், இதனால் இரண்டாம் நிலைத் தலைவர்கள் குழுவை அமைக்க ரணில் விக்கிரமசிங்க தீரமானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உண்மையான தலைவர்கள் முன்வரக் கூடிய வகையில் சம அதிகாரங்கள் கொண்ட தலைமைத்துவ சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply