பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தின் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளது.

அத்துடன்  பல சட்டமூலங்கள் குறித்தும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வில் சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.

Social Share

Leave a Reply